திருமணத்திற்கு நீங்கள் தயார் இல்லை என்பதை அறிய வழிகள்

இன்றைய கால கட்டத்தில், திருமணம் செய்வதற்கான சரியான காலம் வரை இளைய சமுதாயனத்தினர் பொறுமை காக்கின்றனர். ஆனால் நீங்கள் திருமணத்திற்கு தயாரா இல்லையா என்றா குழப்பம் உங்களில் பல பேருக்கு இருக்கும் தானே? 

• சில பேருக்கு அளவுக்கு அதிகமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள பிடிப்பதில்லை. திருமணம் என்பதும் மிகப்பெரிய பொறுப்பு. நீங்கள் அதற்கு தயாராக இல்லையென்றால், கண்டிப்பாக திருமணத்திற்கும் நீங்கள் தயாராக இல்லையே. 

• பொதுவாகவே ஒரு பந்தத்திற்குள் நுழையும் போது பயம் ஏற்படுவது இயற்கையே; குறிப்பாக பெண்களுக்க உங்களுக்கு அவ்வகை பயம் இருந்தால், இந்த திருமண பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்காது என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிடும். 

• உங்களுக்கென்று கணவன், மனைவி, குடும்பம் என்ற எண்ணத்தை தவிர வேறு சில விஷயங்கள் மனதில் உள்ளதா? அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் திருமணத்திற்கு தயாராக இல்லை. 

• உங்கள் தொழில்/வேலையை திருமணம் செய்து, அதோடு உங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துள்ளீர்களா? மடிக்கணினி மற்றும் வேலையுடன் ஒன்றி போய் இருப்பவர்களுக்கு திருமணம் மீது நாட்டம் வருவது கஷ்டமே. 

• உங்களுக்கு உணவருந்த, தூங்க மற்றும் அனைத்து வேலைகளையும் தனியாக செய்யவே விருப்பமா? அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் திருமணத்திற்கு தயாராக இல்லை என்று அர்த்தம். 

• உங்களுக்கு திருமணம் ஆகி விட்டால், உங்களுக்கென நேரம் செலவழிப்பது குறைந்து விடும். காரணம் உங்களுடன் இருப்பவர்களுக்காக உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டி வரும். அதனால் உங்கள் நேரத்தை இழக்க நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் இப்போதைக்கு திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதை குறிக்கும். 

• உங்கள் படுக்கை மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லையா? அப்படியானால் ஒரு துணையுடன் கை கோர்த்து நடப்பது உங்கள் தோது படாது. 

• திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதை சிரமமாக நினைத்தால், திருமணத்திற்கு நீங்கள் இப்போது தயாராக இல்லை என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறியே. 

• நிதி சுமைகள் இருக்கும் காரணத்தினால், பல பேர் திருமணத்திற்கு பெரிதும் யோசிக்கின்றனர். நிதி நிலைமை சரியில்லாமல் இருப்பதால், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த சிலர் தயாராக இருப்பதில்லை.

0 Comment "திருமணத்திற்கு நீங்கள் தயார் இல்லை என்பதை அறிய வழிகள்"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)