இந்த மாதம் 15 புது படங்கள் ரிலீஸ்


இந்த மாதம் ஜூனில் 15 புது படங்கள் ரிலீசாகின்றன. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்களும் ரூ.8 கோடி வரை செலவிட்டு எடுக்கப்பட்ட பெரிய படங்களும் வருகிறது.

மஞ்சப்பை, உன் சமையல் அறையில் ஆகிய இரு படங்களும் வருகிற 6–ந் தேதி ரிலீசாகின்றன. மஞ்சப்பை படத்தில் விமல், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்தள்ளனர். லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து உள்ளனர்.

உன் சமையல் அறை படத்தில் பிரகாஷ் ராஜ், சினேகா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரகாஷ்ராஜே இயக்கி தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

வருகிற 13–ந்தேதி முண்டாசுப்பட்டி, நான்தான் பாலா, மெல்லிசை ஆகிய மூன்று படங்கள் வருகின்றன. நான்தான் பாலா படத்தில் காமெடி நடிகர் விவேக் நாயகனாக நடித்துள்ளார்.

வருகிற 20–ந்தேதி அரிமா நம்பி, பூலோகம் படங்கள் வருகிறது. அரிமா நம்பியில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்து உள்ளார். பூலோகம் படத்தில் ஜெயம் ரவி, திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர்.

27–ந்தேதி சித்தார்த் நடிக்கும் ஜிகர்தண்டா, விஜய் இயக்கிய சைவம் படங்கள் ரிலீசாகின்றன. ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ், சுந்தர். சி இயக்கிய அரண்மனை உள்ளிட்ட மேலும் சில படங்களும் இம்மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comment "இந்த மாதம் 15 புது படங்கள் ரிலீஸ்"

Post a Comment