ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிரிகளாக இருக்கும் காட்சியை, தமிழகத்தில் மட்டும் தான் காண முடிகிறது. எதிர்க்கட்சியினர் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள், இறப்பு போன்ற சடங்குகளில், ஆளும்கட்சியினர் கலந்து கொள்வதே, மாபெரும் குற்றமாக இங்கு கருதப்படுகிறது. ஆனால், மத்தியில், பா.ஜ., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் அரசியல் எதிரிகள் தான் என்றாலும், தலைவர்கள் நட்பில், எவ்வித மாற்றமும் இல்லை. இங்கு சுஷ்மாவும், கம்யூ., தலைவி பிருந்தாவும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து, புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதைப் பாருங்கள். இதை பார்த்தாலாவது, தமிழக அரசியல்வாதிகள், அரசியல் நாகரிகத்தை பின்பற்றுவரா?
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள்!"
Post a Comment