ஈராக்கில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிப்பு


ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹில்லாக் பகுதியில் உள்ள விவசாய நிலையில் 50 சடலங்கள் கடந்த புதன்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான உடல்களில் கைகள் கட்டப்பட்டுள்ளது. என்று ஈராக் ராணுவ செய்தித் தொடர்பாளர் சாத் மான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பாக்தாத்திற்கு தெற்குப்பகுதியில் சுமார் 95 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஹில்லாக் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் நகரமாகும். இறந்தவர்களை அடையாளம் காண விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக சரத்மான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பின் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள். தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய பகுதிகளை கைப்பற்றினர். அதனை மீட்க ராணுவம் போராடி வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் கடந்த 2006-2007ம் ஆண்டுகளில் குழுவாத போரின்போது துப்பாக்கி குண்கள் பாய்ந்த உடல்கள் காணப்படுவது பொதுவாக இருந்தது. அதுபோன்ற சம்பவம் ஈராக்கில் மீண்டும் தலைதூக்கியுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

0 Comment "ஈராக்கில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிப்பு"

Post a Comment