மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?
தந்தை: கேளேன்...
மகன் : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிகிறீர்கள்?
தந்தை: 100 டாலர் ...
மகன் : அப்படீனா எனக்கு 50 டாலர் தாங்கப்பா!
தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 டாலரை மகனிடம் கொடுத்தார்.
மகன் சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டான். அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தான்.
தந்தை: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்?
மகன் : முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 100 டாலர் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்க அப்பா. உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும்.
தந்தைக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே மகனை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் விசயம் என்னவென்றால் "தன்னை நேசிப்பவர்களுக்கு காட்டப்படும் அன்பை விட 100 டாலர் ஒன்றும் பெரிதல்ல".
குடும்பத்துக்காக உழைக்கும் நீங்கள் குடும்பங்களின் சந்தோசத்தையும் கவனியுங்கள். சில மணி நேரத்தை உங்கள் குடும்பத்தோடு செலவழியுங்கள். நாளை நாம் மரணித்தால் நாம் பணி புரிந்த நிறுவனம் நமக்கு பதிலாக வேறொருவரை பணிக்கு அமர்த்திக் கொள்ளும். ஆனால் நமது குடும்பம் துக்கத்தோடும், துயரத்தோடும் நம்மை எண்ணி எண்ணி வாழுமே! இதை யோசித்தீர்களா?
ரொம்ப யோசிக்க வேண்டாம்... நாளையெனும்.... நாளை ... பிறகு இல்லாமேலே போகலாம்
0 Comment "ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம். அனைவரும் கொஞ்சம் இத படிங்க!! "
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.