உலகில் வறுமையில் வாடுபவர்களின் பட்டியலில் அதிக சதவிகிதத்துடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதே போல் குழந்தை இறப்பிலும் இந்தியா முதலிடம் பிடித்து தனது பரிதாப முகத்தை காட்டியுள்ளது.தெற்கு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டு 45 சதவிகித மக்கள் வறுமையில் வாடுவதாக கூறப்பட்ட நிலையில் 2010ல் அது 14 சதவிகிதமாக குறைந்தது. இருந்தபோதிலும் சீனா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் 32.9 சதவிகிதம் பேர் வறுமையில் வாடுவதாக ஐ.நா சபையின் புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. அதே போல் 2012ஆம் ஆண்டின் புள்ள விவரங்களின்படி குழந்தை இறப்பிலும் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 1,40,000 பேர் தாங்கள் பிறந்த ஐந்தாவது ஆண்டிற்குள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டில் உலக அளவில் 6.6 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தெற்காசியாவில் மட்டும் 2.1 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.நாட்டின் பொருளதார வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டும் அரசுகள், மக்களின் சுகாதார வளர்ச்சியிலும் அக்கறை காட்டவேண்டும் என்பது இப்புள்ளிவிவரங்கள் மூலம் நமக்கு தெரியவருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "உலகின் வறுமையில் வாடுபவர்கள்-குழந்தை இறப்பு பட்டியல்: இந்தியா முதலிடம்"
Post a Comment