மும்பை ஐ.ஐ.டி., மாணவர் நிதின் சலூஜா மற்றும் டில்லி ஐ.ஐ.டி., மாணவர் ராகவ் வர்மா இருவரும், அமெரிக்காவில் ஒரே நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்றனர்.அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று சில மாதங்கள் பணியாற்றினர். ஆனால், அவர்களுடைய மனதில், 'டீ கபே' ஆரம்பிக்கும் எண்ணம் இருந்ததால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினர்.காங்கிரஸ் கட்சியின் பூபேந்தர் சிங் ஹூடா தலைமையிலான, அரியானா மாநிலம், குர்கான் மற்றும் நொய்டாவில், 'சாயோஜ்' என்னும், 'டீ கபே'யை துவக்கினர்.தனியார் நிறுவனத்தின் நிதியுதவியுடன், தங்களுடைய சேமிப்பையும் சேர்த்து, ஐந்து கிளைகள் துவங்கினர். இந்த ஆண்டு இறுதிக்குள், மேலும் ஐந்து கிளைகளை துவக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.நாடு முழுவதும், தங்களுடைய டீக்கடையின், 50க்கும் மேற்பட்ட கிளைகளை துவக்குவதற்குத் தேவையான, முதலீடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஏறக்குறைய, 25க்கும் மேற்பட்ட சுவைகளில், இவர்கள் தயாரித்து தரும் டீ, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்பவும் டீ தயாரித்து வழங்குகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "டீக்கடை நடத்தும் ஐ.ஐ.டி., மாணவர்கள்"
Post a Comment