உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம், பிரேசிலில் இன்று ஜெர்மனி–அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடக்கிறது. உலகமெங்கும் இது பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே ஈராக், சிரியா, நைஜீரியா, உக்ரைன் என பல இடங்களிலும் உள்நாட்டு சண்டைகள் நடந்து வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடக்கிறவேளையில், உலகமெங்கும் சண்டை நிறுத்தம் கடைப்பிடித்து அமைதி தவழ வேண்டும் என்று வாடிகன் விரும்புகிறது.இது தொடர்பாக போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் உருவாக்கிய வாடிகன் போண்டிபிகல் கவுன்சில் (கலாசாரம்) விடுத்துள்ள அறிக்கையில், உலகமெங்கும் சண்டைகள் நடந்து வருகிற வேளையில், அவை ஏதுமின்றி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது, எங்கும் அமைதி தவழ வேண்டும் என்று கால்பந்து ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். ரியோ டீ ஜெனிரோ நகரில் உள்ள மராக்கானா அரங்கில் ஒரு நிமிடம் அமைதி தவழ வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று வாடிகன் கலாசாரத்துறை மந்திரி கார்டினல் கியான்பிராங்கோ ரவாசியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "கால்பந்து இறுதி போட்டி உலகமெங்கும் சண்டை நிறுத்தம் வாடிகன் வேண்டுகோள்"
Post a Comment