தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மீண்டும் நாளை அவர் எம்.சி.சி அணிக்காக களம் இறங்க உள்ளார். லார்ட்ஸ் மைதானத்தின் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை எம்.சி.சி.ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டி குறித்து சச்சின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:குடும்பத்துடன் நான் மகிழ்ச்சியாக நாட்களை கழித்து வருகிறேன். நான் 10 நாட்களுக்கு முன்பாக இந்தப் போட்டிக்காகப் பயிற்சி செய்யத் தொடங்கினேன். சில பந்துகளை அடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் பந்துகளை மட்டையின் மையப்பகுதியில் பட வைக்க இன்னும் முயற்சி செய்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "தெண்டுல்கர் மீண்டும் களம் திரும்புகிறார்."
Post a Comment