மும்பையில் வருகிற சட்டசபை தேர்தலில் மோடி அலையை சிதறடிக்க வேண்டும் என்று ராஜ்தாக்கரே பேசினார்.பாராளுமன்ற தேர்தலில் மராட்டிய நவ நிர்மான் சேனா பா.ஜனதாவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியது. என்றாலும் மோடி அலையால் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.இந்த ஆண்டு இறுதியில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மும்பையில் மராட்டிய நவ நிர்மான் சேனா ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் ராஜ்தாக்கரே தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடியை தாக்கி ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:–இளைஞர்கள் அனைவரும் இணையதளம், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் எந்நேரமும் அமர்ந்து இருக்கக் கூடாது. சமூக வலைதளங்கள்தான் மோடியை மிகப்பெரிய ஆளாக காட்டியது. அதே சமூக வலைதளங்கள்தான் தற்போது மோடியை உடைந்த பானை என்று காட்டுகின்றன. அவர் தவறான வாக்குறுதிகள் அளித்து மிகப்பெரிய ஆளாக காட்டிக் கொண்டு பிரதமராகி விட்டார். எனவே மோடி போல் யாரும் இருக்க வேண்டாம். வருகிற தேர்தலில் நாம் மோடி அலையை சிதறடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "தவறான வாக்குறுதி அளித்து மோடி பிரதமராகிவிட்டார்"
Post a Comment