ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் வெளியிடப்படும் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா முதலிடம் பிடித்து வருவது வழக்கம். ஆனால் கேரளாவின் சாதனையை ஜார்க்கண்டை சேர்ந்த ராம்கர்க் மாவட்டத்தில் உள்ள சேட்டர் என்ற கிராமம் முறியடித்துள்ளது.இந்த கிராமத்தில் உள்ள அனைவருமே கல்வியறிவு பெற்றுள்ளதுடன், இக்கிராமம் ஊழலற்ற கிராமமாகவும் விளங்கி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இக்கிராமம் நாட்டிற்கே முன் மாதிரி கிராமமாக விளங்குகிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த கிராமத்தில் குற்றங்களே நிகழ்ந்ததில்லை. எந்த பிரச்சனைக்காகவும் காவல்துறையினரிடம் செல்வதற்கு பதிலாக தங்களுக்குள்ளாகவே இவர்கள் பேசித் தீர்த்துக்கொள்கின்றனர்.இந்த கிராமத்தில் முறையான சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வேறு ஏதேனும் கிராமத்திற்கு தேவை ஏற்பட்டால் அதற்கேற்ற ஆட்களை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். அக்கிராமவாசிகளில் யாருக்கேனும் பணத்தேவை ஏற்பட்டால், அதை வழங்கும்போது எதிலிருந்து பணம் வழங்கப்படுகிறது என்று முறையான கணக்கையும் அவர்கள் எழுதி வருகின்றனர். அக்கிராமத்தில் 1000 பொதுமக்களும் 35 ஆசிரியர்களும் வசிப்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு கிராமம் இருப்பது அதிசயமான ஒன்று தான்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "100 சதவிகித கல்வியறிவு, ஊழலற்று விளங்கும் அதிசயம் கிராமம்."
Post a Comment