நேற்று தமிழ்நாடு முழுவதும் வெளியான மஞ்சப்பை திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வசூலை கொடுத்துக்கொண்டிருப்பதாக தியேட்டர் அதிபர்கள் கூறியுள்ளனர். அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை இயக்குனர் என்.லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்தார்.
தமிழகம் முழுவதும் சுமார் 270 திரைகளில் வெளியான மஞ்சப்பை, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் நாள் வசூலில் 70% வசூல் செய்துவிட்டதாகதியேட்டர் அதிபர்களும், விநியோகிஸ்தர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ராஜ்கிரணின் அப்பாவித்தனமான கிராமத்து பாணி நடிப்பும், லட்சுமி மேனனின் துறுதுறு நடிப்பும், ரசிகர்களை ஈர்த்துள்ளது என்றும், இந்த படம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நல்ல வசூலை கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு நம்புவதாக கூறப்படுகிறது.
முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரின் படத்தின் வசூலை நெருங்கி, சாதனை படைத்த இயக்குனர் ராகவனுக்கு கோலிவுட்டில் பாராட்டு குவிந்து வருகிறது. இதையடுத்து அவர் என்.லிங்குசாமி தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

0 Comment "கோச்சடையான் வசூலை நெருங்கியது மஞ்சப்பை. இயக்குனருக்கு குவியும் பாராட்டு"
Post a Comment