நடிகை த்ரிஷா சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம ஆசாமிகள் நடிகையை பட்ட பகலில் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. கொலையாளி யார் அவர்கள் ஏன்? த்ரிஷாவை கொலை செய்தார்கள் என்பதை பொலிஸ் விசாரணை செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் தல55 படத்தின் கதை.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அஜித்55 படத்தின் கதை வெளியே கசிந்துள்ளது. இந்த வேலையை செய்தவர் கௌதம் மேனனின் உதவியாளர். அவர் த்ரிஷா ஈசிஆர் சாலையில் கொல்லப்பட்டுவிடுவதாகவும், அந்த கொலையை அஜீத் மற்றும் அனுஷ்கா துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பது தான் தல55 படத்தின் கதை என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மீடியாக்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த கதையை வெளியிட்ட உதவி இயக்குனரை படத்தில் இருந்து கவுதம் மேனன் அதிரடியாக நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதே போன்று சில நாட்கள் முன்பு தான் விஜய்யின் கத்தி படத்தின் கதை வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comment "நடிகை த்ரிஷா ஈ.சி.ஆர். ரோட்டில் படுகொலை!...கொலையாளி யார்?கொலையாளிகளை தேடும் படலம் தீவிரம்"
Post a Comment