சூட்டை கிளப்பிய ரிஹானாவின் ஆடை!!!

நியூயார்க்கில் ஆண்டுதோறும் சிறந்த ஆடைவடிவமைப்புக்காக CFDA என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் இன்று காலை நடந்து முடிந்தது. இதில் தன்னுடைய முன்னழகையும், பின்னழகையும் பாருங்கள்! பாருங்கள்! என்று பாப் பாடகி ரிஹானா அணிந்து வந்த ஆடை ஹாலிவுட் உலகத்தையே வாயைப் பிளக்க வைத்துள்ளது. ஆடம் ஷெல்மேன் என்ற ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய இந்த வைரம் பதித்த ஆடை ரிஹானாவின் அழகை பார்வையாளர்கள் பருக கங்கணம் கட்டிக்கொண்டு வடிவமைக்கப்பட்டதுபோல் உள்ளது. இதை அணிந்துகொண்டு அவர் சிகப்பு கம்பளத்தில் நடந்து வருகையில் எல்லோருடைய கண்களும் ரிஹானாவையே மொய்த்துக்கொண்டிருந்தன. CFDA வரலாற்றில் அழிக்க முடியாமல் இடம்பெற்றுவிட்ட ரிஹானாவின் இந்த ஆடையை பார்த்தவர் யாரும் தன் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டார். அதிலும் மறைக்க வேண்டிய முக்கிய இடத்தைக்கூட மெல்லிய துணியை கொண்டு மூடி ஆடை
வடிவமைப்பு உலகில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளார் வடிவமைப்பாளர் ஆடம் ஷெல்மேன். ரிஹானாவின் ஆடைக்கேற்ப கச்சிதமாக அமைந்திருக்கும் ஹெட்ஸ்கார்ப்பும், கையுறைகளும் 216,000 ஸ்வரோவ்ஸ்கி க்ரிஸ்டல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல பின்னழகை மேலும் தூக்கிக் காட்டும் ஹீல்ஸ் ஷூக்களுடன் ஒய்யாரமாக பார்வையாளர்களை நோக்கி கையசைத்த ரிஹானா ஒரு தேவதையாகவே எல்லோருக்கும் காட்சி தந்தார். CFDA 2014-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் ரிஹானா அணிந்து வந்த வைரம் பதித்த அந்த ஆடையை பார்ப்போம் வாருங்கள்

0 Comment " சூட்டை கிளப்பிய ரிஹானாவின் ஆடை!!!"

Post a Comment