கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளைத் தவிர அனைத்துக் காட்சிகளிலும் நடித்தது லொள்ளுசபா ஜீவா தான் என்ற செய்திகள் திரையுலகில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று திரும்பிய ரஜினி, சண்டை, நடனம் போன்ற காட்சிகளில் சிரமப்பட்டு நடிக்க முடியாத காரணத்தால் அவரைப் போலவே நடித்து மிமிக்ரி செய்து சின்னத்திரையில் புகழ்பெற்ற ’லொள்ளு சபா’ ஜீவாவை நடிக்கவைத்துள்ளார் சௌந்தர்யா.
கோச்சடையானில் ரஜினியின் வீரதீர சாகசங்களைப் பார்க்கவேண்டும் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்குமோ... அதே அளவிற்கு பாலிவுட்டிலிருந்து ரஜினியுடன் நடிக்கப் போகிறோம் என்ற ஆவலுடன் வந்த தீபிகா படுகோனே உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ரஜினியுடன் தீபிகா படுகோனே நடிப்பதாக காட்டப்படும் ரொமான்ஸ் காட்சிகளில் ஜீவா தான் நடித்திருக்கிறார். கோச்சடையானில் ரஜினிக்கு பதிலாக ஜீவா நடிக்கும் விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்று சௌந்தர்யா பலரிடமும் சத்தியம் வாங்கினார். அந்த சத்தியம் ஜீவாவிடமும் வாங்கப்பட்டது. இந்த செய்தி வெளியில் எப்படி வெளியானது என்று தெரியாமல் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் ‘லொள்ளு சபா’ ஜீவா.
ரஜினியின் மேனரிசங்களை ஜீவாவால் அப்படியே செய்யமுடியும் என்றாலும், அவருக்கே நடனமாடத் தெரியாது என்பதால், ஜோடி நம்பர் ஒன் புகழ் யுவராஜ் என்பவரை ரஜினிக்கு பதிலாக நடனமாடவைத்திருக்கிறார்கள். இந்த செய்தி எப்படி வெளிவந்தது என்று சௌந்தர்யா உட்பட கோச்சடையான் டீம் முழுவதுமே அதிர்ச்சியில் இருக்கிறது. அதே விதமான அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள் என்றும் பேசப்படுகிறது.
இந்த உண்மை வெளிவந்ததால் கோச்சடையான் படத்துக்கு கிடைக்கப் போகிற வரவேற்பும் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறது ரஜினி தரப்பு. ஏற்கனவே சில கடன் பிரச்சனைகள் இருப்பதால் படம் வெளிவருவதில் சிக்கல் இருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
0 Comment "கோச்சடையானில் ரஜினி நடிக்கவில்லை! உண்மை அம்பலம்!"
Post a Comment