நியுசிலாந்தில் அழகிப் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற பெண்ணுக்கு, இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு பெண் என நினைத்து அந்தப் பட்டத்தை தவறுதலாக வழங்கிவிட்டதாகக் கூறி அந்நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் திரும்பப் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து "நியூஸிலாந்து ஹெரால்டு' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி:
ஃபிஜி நாட்டைச் சேர்ந்த சிந்தியா நாத் (19) என்ற பெண், "தி ஃபேஸ் ஆஃப் பியூட்டி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய அழகிப் போட்டியில் "மிஸ் குளோப் இன்டர்நேஷனல்' பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
அந்தப் பட்டத்துடன், துருக்கி நாடு சென்று வருவதற்கான இலவச டிக்கெட்டுகளை பரிசாக அளிப்பதாகவும் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அந்தப் பரிசைப் பெறுவதற்காக அமைப்பாளர்களை சிந்தியா நாத் தொடர்பு கொண்டபோது, பயணச் செலவுகளுக்காக 3 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.1.75 லட்சம்) செலுத்தவேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.
தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று சிந்தியா கூறவே, போட்டியில் பங்கேற்ற லோரிஸô லத்தீஃப் என்ற இந்தியப் பெண் போலவே சிந்தியா நாத் இருப்பதால், தவறுதலாக சிந்தியாவுக்கு பட்டம் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறி, பட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
கொதித்துப் போன சிந்தியா, தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அமைப்பாளர்கள் தனக்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு தன்னிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
0 Comment "அடையாளக் குழப்பத்தால் அழகி பட்டத்தை இழந்த பெண்"
Post a Comment