பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு விலகினார்
பிரீத்தி. தற்போது, ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பிரீத்தியின் ஆபாச படங்கள் இணையதளங்களில் பரவியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அதுபற்றி ஆராய்ந்தபோது, தனது முகத்துடன் வேறு சிலரது நிர்வாண படங்களை இணைத்து இப்படி பரப்பியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்.
இதனால் மனதளவில் வேதனையுடன் இருக்கும் பிரீத்திஜீந்தா. இதுகுறித்து சிலரைப்போன்று சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கவில்லை. மாறாக, தனது டுவிட்டரில், நடிகைகளும் மனிதர்கள்தான். எல்லோரையும் போன்று எங்களுக்கும் மானம், மரியாதை எல்லாம் உண்டு. மேலும், நாங்களும் மற்றவர்களைப்போன்று குடும்பமாகத்தான் இருக்கிறோம். இந்த நிலையில், இப்படி தவறான முறையில் ஆபாச படங்களை வெளியிட்டால், மன நிம்மதி போய் விடுகிறது. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகிறது. அதனால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் அதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரீத்தி ஜிந்தாவின் இந்த உருக்கமான வேண்டுகோளை அடுத்து, தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த அவரது ஆபாச படங்கள் இப்போது குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
0 Comment "இணையதளங்களில் பிரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்கள்!"
Post a Comment