நாமக்கல் அருகே, நடிகை நமீதா பங்கேற்ற, நாடக விழா மேடை சரிந்ததால், லேசான காயத்துடன் அவர், பாதியிலேயே கிளம்பினார். நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில், மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, சினிமா இயக்குனர், பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா அழைக்கப்பட்டிருந்தனர். இரவு 10:30 மணிக்கு, நமீதா, நாடக மேடைக்கு வந்தார். நமீதாவை பார்த்ததும், அங்கிருந்த ரசிகர்களும், மேடையில் ஏறினர்; அதனால், மேடை ஒருபுறம் சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த, நமீதா, நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர். அதிர்ச்சியடைந்த, நமீதா, சிறு காயத்துடன், காரில் ஏறி ஓட்டம் பிடித்தார். விழா ரத்து செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "நடிகை நமீதாவால் மேடை சரிந்தது"
Post a Comment