ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் 'கத்தி'. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தைப் படு வேகமாக இயக்கிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
வரும் தீபாவளியான அக்டோபர் 23ல் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். அதற்காக கத்தி படக்குழு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
கொல்கத்தாவில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் எனப் பல இடங்களில் தொடர்ந்து நடந்துவருகிறது. இப்படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.
இரண்டு கூர்மையான அறிவுள்ள வல்லவனும், நல்லவனும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதுதான் 'கத்தி' படத்தின் கதை. இதில் நல்லவனாக அரவிந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இன்னொரு விஜய் ஆண்ட்ரூ என்கிற பெயரில் வில்லனாக வருகிறார்.
மேலும் சமந்தா வேணி கேரக்டரிலும், சதீஸ் தாணு என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துவிட்டார் அனிருத்.
0 Comment "கத்தி படத்தின் கதை!"
Post a Comment