மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் இந்தி நடிகர் சஞ்சய்தத். அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு இந்தி நடிகரான சல்மான்கானும் விரைவில் சிறைக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருக்கிறது.
கடந்த 2002-ம் ஆண்டு இவர் குடித்து விட்டு கார் ஓட்டியதில் சாலை ஓரத்தில் படுத்திருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளே சல்மான்கானுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொன்னதால், அவரது வழக்கு விசாரணை அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
இதையடுத்து, சல்மான்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இந்த வழக்கில் இருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று தான் எடுத்து வந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள சல்மான்கான், தான் நடித்து வந்த படப்பிடிப்புகளுக்கும் சரியாக செல்லாமல் வீடே கதியென்று கிடக்கிறாராம்.
அதேபோல் அவரை வைத்து தற்போது நோ என்ட்ரி, மெயின் என்ட்ரி உள்பட இரண்டு படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்களும் அவரைப்போலவே அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம். இந்தஇரண்டு படங்களுமே ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறதாம். இப்போது பாதி படப்பிடிப்புகளே நடந்துள்ளதால், ஒருவேளை சல்மான்கான் உடனடியாக ஜெயிலுக்கு சென்று விட்டால், இந்த படங்களில் கதி அதோ கதிதானாம். ரூ. 500 கோடி அவர்களுக்கு நஷ்டமாகி விடுமாம்.
0 Comment "சல்மான்கானுக்கு 10 ஆண்டு சிறை?"
Post a Comment