மே 9 ஆம் தேதி வெளி வந்திருக்க வேண்டிய கோச்சடையான் படம் வெளிவரவில்லை. மாறாக மே 23 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலதாமதத்துக்கு தொழில்நுட்பக்கோளாறு என்று காரணம்
சொல்லப்பட்டது. ஆனால், கோச்சடையான்' திரைப்படம் தயாரிப்பதற்காக வங்கிகளில் சுமார் 40 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது என்றும், அந்தத் தொகையை தயாரிப்பாளர் திருப்பி செலுத்தாததால்தான், கோச்சடையான் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது என்ற தகவல் பின்னர் வெளியானது.
வங்கிக் கடன் பிரச்சனையில் சிக்கியது மீடியா ஒன் குளோபல் நிறுவனம்தான். கோச்சடையான் படத்திற்காக பல கோடிகள் முதலீடு செய்ததோ மும்பையைச் சேர்ந்த ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். இவ்விரு நிறுவனங்களும் இணைச் கோச்சடையான் படத்தைத் தயாரித்திருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது மீடியா ஒன் குளோபல் நிறுவனம் நிதி சிக்கலில் மாட்டி இருப்பதால், கோச்சடையான் படத்தின் முதன்மை முதலீட்டுத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல், தாங்களாகவே படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் அடிபடுகிறது.
அதாவது, நிதி சிக்கலில் மாட்டி உள்ள மீடியா ஒன் நிறுவனத்தை கழட்டிவிட்டு, மற்ற பிரச்சனைகளையும் தாங்களே சுமுகமாக தீர்த்துவிட்டு கோச்சடையான் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றியடைந்தால் 'கோச்சடையான்' படத்தை 23ம் தேதியன்று வெளிவருவது உறுதி என்கிறார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள்.
0 Comment "கோச்சடையான் படத்தை வெளியிட புதிய திட்டம்!"
Post a Comment