கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘லிங்கா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் சந்தானம்.
‘குசேலன்’, ‘எந்திரன்’ உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்தவர் சந்தானம். ‘குசேலன்’ படத்தில் வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே நடித்திருந்தார்கள்.
சந்தானம் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் தற்போது வடிவேலு நடிப்பதில்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்தது. ‘லிங்கா’ படத்தில் இரண்டு ரஜினி என்பதால் ஒரு ரஜினியுடன் காமெடியனாக வடிவேலுவையும், இன்னொரு ரஜினியுடன் சந்தானத்தையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், சந்தானம் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ‘லிங்கா’ படத்தில் இருந்து விலகிவிட்டார் வடிவேலு. தற்போது ரஜினியுடன் மீண்டும் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம்.
இது குறித்து சந்தானம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் “‘லிங்கா’ படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
‘லிங்கா’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று தயாராகி வருகிறது
0 Comment "வடிவேலு ரஜினியுடன் நடிக்க மறுப்பு; வேறு வழியில்லாமல் சந்தானம் ஒப்பந்தம்"
Post a Comment