எந்தவொரு உறவிலும் அதற்கென பிரத்யோகமான மனக்கசப்புகள், தவறுகள் மற்றும் முடிவுகள் ஆகியவை இருக்கும். எனினும், தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், உங்களுடைய துணைவர் விட்டுச் சென்று விடுவார். பெண்கள் இந்த வகையில் உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில உள்ளன.
அதிலும் தங்களுடைய துணைவரின் வாழ்க்கையை நாசப்படுத்துகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இந்தத் தவறுகளை செய்கிறார்கள் என்பது தான் கொடுமை. இது போன்று சாதாரணமாக உறவுகளில் நடக்கும் தவறுகள் காரணமாக, தம்பதிகள் பிரிந்து விடும் நிலை ஏற்படுகிறது.
உறவுகளில் பெண்கள் செய்யும் தவறுகள் இயற்கையாகவே ஏற்படுகின்றன. ஆண்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை மற்றும் பெண்கள் ஆண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை என்பது தான் உலகத்தின் முன் வைக்கப்படும் பெரிய பிரச்சனையாகும். தங்களுடைய துணைவர் இந்த விஷயங்களைப் பற்றி உணர்ந்திருக்கிறார், வருத்தப்படுவார் என்பதைப் பற்றித் தெரியாமலேயே பெண்கள் தங்களுடைய தவறுகளை செய்து கொண்டிருப்பார்கள். எனினும், ஒரே தவறை பலமுறை திரும்பத் திரும்ப செய்யும் போது, அது ஒரு பழக்கமாக மாறி விடுவதால், அந்த தவறுகளை உடைப்பது மிகவும் கடினமாகி விடுகிறது.
காதல் வாழ்க்கையில் மனமுடைந்து போவதையோ அல்லது கண்ணீரையோ சந்திக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. நீங்கள் ஒரு மிகச்சரியான ஜோடியாக இருக்கலாம். ஆனால் இந்த தவறுகளை செய்யும் போது, உங்களவர் விலகிச் செல்ல நேரிடும். எனவே தான், உங்களிடமிருந்து ஆண்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, உங்களுடைய உறவை நெடுங்காலத்திற்கு மகிழ்ச்சியோடு கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலான பெண்கள் உறவுகளில் செய்யக்கூடிய தவறுகளைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.
வெறுமனே மிரட்டுதல்
ஒவ்வொரு சண்டைக்குப் பின்னரும் ‘நான் தூக்கு போட்டுக் கொள்ளுவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் அல்லது பெட்டி படுக்கையுடன் வெளியேறி விடுவேன்’ என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால், உங்களுடன் சீரியஸாக பேசவே அவர் விரும்பமாட்டார். இந்த தவறை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நாள் நீங்கள் உண்மையிலேயே பெட்டி படுக்கையுடன் கிளம்ப வேண்டியிருக்கும்.

அமைதி ஆனால் ஆக்ரோஷமானவர் நீங்கள்!
நீங்கள் அமைதியாக இருப்பவராக தோற்றமளித்தாலும், ஆக்ரோஷமானவராகவே இருப்பீர்கள், அதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்காது. பெண்கள் பின்நாட்களில் வரும் சச்சரவுகளுக்காக முன்கூட்டியே தயாராக இருப்பார்கள். தேவைப்படும் போது பயன்படுத்த ஏற்ற வகையில் தங்களுடைய குறைகளை பட்டியலிட்டு, பத்திரமாக வைத்திருப்பார்கள். இந்த வகையான திட்டமிட்ட சச்சரவுகள் எந்தவொரு மனிதனையும் வெகுண்டெழச் செய்துவிடும், உறவும் முறிந்துவிடும்.

நச்சரிப்பு
ஆண்களை விட பெண்கள் அதிகமாக நச்சரிக்கிறார்கள் அல்லது தொந்தரவு செய்கிறார்கள் என்பது உண்மையாகும். ஒரே விஷயத்தைப் பற்றி எப்பொழுதுமே நீங்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அவர் உங்களை சிறிதளவு கூட மதிக்க மாட்டார்.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான்!
ஒவ்வொரு பெண்ணும் மற்ற பெண்ணிடமிருந்து மாறுபட்டு இருப்பதைப் போலவே, ஆண்களும் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணும் தனித்தன்மையானவர். எனவே, அவர்களை எல்லாம் ஒரே தட்டில் வைத்து எடை போட வேண்டாம். அவர்களுடைய உணர்வுகளை ஒரே மாதிரியாக எண்ண வேண்டாம்.

அடிக்கடி உங்களைப் பற்றி அவரிடம் சொல்லுதல்
ஒரு விஷயத்தைப் பற்றியோ அல்லது மனிதரைப் பற்றியோ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நீளமான உரையாடல் செய்வதை ஆண்கள் எப்பொழுதும் விரும்புவதில்லை. இது போன்ற ஆர்வமில்லாத விஷயங்களைப் பற்றி நீங்கள் பேசத் துவங்கும் போது, அவர் உடனடியாக ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகி விடுவார். அது மட்டுமல்லாமல், உங்களுடைய உணர்வுகளைப் பற்றி மட்டுமே நீங்கள் அதிகமாக பேசிக் கொண்டிருந்தால், அவர் விரும்பக் கூடிய மாய உலகமாக நீங்கள் இருக்க மாட்டீர்கள்.

அவருடைய வாழ்க்கை முறையை குறை கூறுதல்
‘சுதந்திரமாக’ சுற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் உலவி வரும் ஆண்கள், பெண்களின் இயற்கை குணமான ‘கூட்டுக்கு’ திரும்புதல் என்ற வட்டத்திற்குள் இருப்பதில்லை. இயற்கை இப்படி இருக்கையில், அவருடைய வாழ்க்கை முறையில் நீங்கள் மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்யும் போது, உடனடியாக எதிர்ப்பு மட்டுமே கிளம்பும். இந்த மாற்றங்கள் அவரிடமிருந்து இயற்கையாகவே வரும் வரை சற்று பொறுத்திருங்கள். பொறுப்புடன் மாற்றங்கள் வரும்.

மாமியார்
பெரும்பாலன ஆண்கள் தங்களுடைய அன்னையருடன் பாசமாக இருப்பார்கள் என்பது உண்மை. எனினும், அவர்கள் அனைவருக்கும் அன்னையர்கள் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறார்கள், அவர்கள் புதிதாக வந்த உறவு கிடையாது. எனவே, அவருடைய அம்மாவைப் பற்றி குறை பேசி வருவதை உடனே நிறுத்தி விடுங்கள். அவர் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நம்பிக்கையான மற்றும் நட்பான் பெண் உறவை மட்டுமே!

சொந்த வாழ்க்கை
தங்களுடைய காதல் வாழ்க்கையைச் சுற்றியே தங்களுடைய வாழ்க்கையை புனைந்து நிற்கும் பெண்கள், பிற எல்லாவற்றையும் அதையொட்டியே செயல்படுத்துகிறார்கள். இவ்வகையில் உங்களுடைய உறவு உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் இந்த விஷயத்தை வேறு வகையில் பார்க்க வேண்டும் : உங்களுடைய உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், நீங்களும் மகிழ்ச்சியானவராக இருக்க வேண்டும்.

எனக்கு மட்டுமே!
நீங்கள் ஒருவருடன் உறவில் இருக்கும் போது, உங்களைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டு அவரை மறந்து விடுவது நடக்கும். அதீதமான அளவிற்கு எடை போடுதல், சரியான மேக்கப் போடாமல் இருத்தல் மற்றும் குறை கூறிக் கொண்டே இருந்தால் உங்கள் மீதான பற்றுதல் அவருக்கு குறையத் தொடங்கி விடும்.

புகழ்ந்து பேசுவதில்லை
பெண்கள் விரும்புவதைப் போலவே ஆண்களும் மற்றவர்கள் தங்களைப் புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு முறையும் அவர் செய்வது எதுவும் ‘திருப்தியாக இல்லை’ என்று நீங்கள் சொல்லி வந்தால், நாளடைவில் உங்களை எதுவுமே ‘திருப்திப்படுத்த முடியாது’ என்று அவர் நினைக்கத் தொடங்கி விடுவார்.

துரத்துதல்
உங்களால் கையாளக் கூடிய சண்டைகளை மட்டுமே நீங்கள் போட வேண்டும். ஒரு சண்டையின் போது, அவரை திரும்ப முடியாத ஒரு நிலைக்கு நீங்கள் துரத்தி விட்டால், உங்களுடைய உறவு நாசமாகி விடும். அவருடைய எல்லைகளை நீங்கள் பரிசோதிக்க வேண்டாம், அவ்வாறு செய்தால் உங்களுடைய கண்ணீரின் ஓசையை கூட கேட்காதவாறு அவருடைய காது செவிடாக இருக்கும்

0 Comment "அந்த உறவில் பெண்கள் விடும் தவறு எப்படி தெரியுமா ..?"
Post a Comment