சுரேஷ் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசனுக்கு காதல்!

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசனுக்கு காதல் மலர்ந்திருப்பதாக அவ்வப்போது எட்டிப்பார்த்து வந்த செய்திகள் இப்போது அழுத்தமாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இணையதளங்களில் டாப்10 செய்திகளில் முதலிடம் வகித்து வருகிறது. அதனால் இதுவரை இந்த செய்திகளுக்கு எந்த பதிலும் கொடுக்காமல் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா தற்போது தனது டுவிட்டரில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில், எனக்கு இருக்கும் ஏராளமான தோழிகளில் ஸ்ருதிஹாசனும் ஒருவர். அடிக்கடி பேசிக்கொள்வோம். எங்காவது பார்த்தால் மனம் விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெறுவோம். மற்றபடி இதுவரை அவருடன் நான் டேட்டிங்கூட சென்றதில்லை. ஆனால், நான் வாயே திறக்காதபோதும், நான் ஸ்ருதிஹாசனுடான காதலை உறுதிபடுத்தியிருப்பதுபோல் மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
 
அதையடுத்து, ஸ்ருதிஹாசன் கூறியுள்ள செய்தியில், இந்த மீடியாக்கள் ஏன் தான் என்னை மட்டும் இப்படி வஞ்சம் வைத்து துரத்துகிறார்களோ தெரியவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்கவே நேரம் போதவில்லை. இதில் இந்த வதந்திகளுக்கு பதில் சொல்ல எங்கிருந்து நேரம் கிடைக்கப்போகிறது என்று கூறியிருப்பவர், ரெய்னா எனது நண்பர் மட்டுமே. அதனால் அவருடன் என்னை இணைத்து காதல் செய்தி வெளியானது எனக்கு பெரிய ஷாக்காக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

0 Comment "சுரேஷ் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசனுக்கு காதல்!"

Post a Comment