அன்பு கிறிஸ்தவர்களேசிலைவழிபாடு என்றால் என்ன

அன்பு கிறிஸ்தவர்களேசிலைவழிபாடு என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்
சுருக்கமாக சொன்னால்,படைத்த கடவுளை வழிபட்டால் அது இறைவழிபாடு, 
படைத்தவரை மறந்து வேற்று தெய்வங்களை அல்லது மிருகங்கள் ,மற்றும் கற்பனை உருவங்களை செய்து அதை கடவுளாக வழிபட்டால் அது தான் சிலைவழிபாடு. 
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள இந்த செய்தி முழுவதையும் கவனமாக படியுங்கள் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
கத்தோலிக்கர்கள் சிலைவழிபாடு செய்கிறார்கள் என்ற மாபெரும் அபாண்டத்தை தப்பறையை,நற்செய்திபணியை பணம் கொட்டுகின்ற தொழிலாக செய்கின்ற பிரிவினை சபையினரால் திட்டமிட்டு பரப்பபடுகிறது.
இதை அனைவர் செவிகளிலும் ஓதி,மன உளைச்சல்கள் கிறிஸ்தவர்களிடையே உருவாக்கபட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தேவையற்ற வாக்குவாதங்கள்,விமர்சனங்கள்,மனவேதனைகள்,குழப்பங்கள் மற்றும் மதசகிப்பின்மையும் உருவாகி வருகிறது
.ஆலயங்களில் இயேசுவின் பாடுபட்ட சுரூபத்தையும்,அன்னைமரியாள் மற்றும் புனிதர்களின் சுரூபங்களை வைத்திருக்கின்ற இயேசுவால் உருவாக்கபட்ட கத்தோலிக்க திருச்சபை இன்று குற்றவாளி கூண்டில் நிறுத்தபடுகிறது.
கத்தோலிக்கர்கள் சிலைகளையே வழிபடுகின்றனர் என்ற பிரம்மையை உருவாக்கும் படலம் அமைதியாய் நடந்தேறிக் கொண்டிருக்கிறது
.இத்தருணத்தில் சிலைவழிபாட்டைக் குறித்த உண்மைகளை அலச வேண்டியதும வாதங்களுக்குள் இருக்கும் பொருளற்ற தன்மையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது.
முதலாவதாக மறைநூலிற்கு விளக்கமளித்து போதிக்கவும் மக்களை வழிநடத்தவும் இயேசு திருச்சபையை ஏற்படுத்தினார்.
அந்த தூய கத்தோலிக்க திருச்சபை தருகின்ற விளக்கம் மட்டுமே ஏற்புடையது.
ஏனென்றால் இயேசு உருவாக்கிய திருச்சபை(மத்16:18,19&யோவா21:16,17)
தூய ஆவியாரின் துணை கொண்டும்(யோவா16:12,13&அப20:28)
திருதூதர்களின் வாய்மொழி போதனைகளான திருமரபின் படியும்(2தெச2:15&2திமொ2:2)
மறை நூல் ஆராய்சியாளர்களின் அறிவுரையை ஏற்றும் மிக சரியாக மறைநூலை போதிக்கிறது
இது தான் உண்மையான கடவுளின் வார்த்தைகளாக ஏற்றுகொள்ளவேண்டும்
மாறாக ஆளாளுக்கு தங்கள் விருப்பம் போல் விளக்கமளிக்க பைபிள் தடை செய்கிறது(2பேது1:20)
ஆகவே அதிக மக்களை தங்கள் சபைகளில் சேர்த்து அவர்களிடம் தசமபாகம் வாங்கி தங்கள் வசதிகளை பெருக்கிட நினைக்கும் போலி போதகர்கள் சொல்கின்ற எதையுமே ஏற்றுகொள்ளாதீர்கள்(2பேது2:1-3,10ஆ-12)
அடுத்ததாக சிலைவழிபாடு என்பது என்ன என பார்ப்போமானால் படைத்த கடவுளுக்குரிய முதன்மையான இடத்தை அவருக்குரிய வழிபாட்டை அல்லது ஆராதனையை வேற்றுதெய்வங்களுக்கோ அதன் சிலைளுக்கோ மிருகங்களின் சிலைக்கோ கற்பனை தெய்வங்களின் சிலைகளுக்கோ சூரியன் சந்திரன் மற்றும் கடவுளின் எந்த படைப்புகளுக்கோ நாம் கொடுப்போமானால் அது சிலைவழிபாடு
மாறாக படைத்த கடவுளை ஒரு அடையாளம் மூலமாக வழிபடுவது சிலைவழிபாடாகாது..
.பைபிளில் பல இடங்களில் மக்கள் படைப்பின் கடவுளை மறந்து வேற்றுதெய்வங்களையும் மிருகங்களையும் இயற்கையையும் கடவுளாக பாவித்து அதற்கு கடவுளுக்குரிய வழிபாட்டை செய்கின்றனர்.
இந்த அருவருப்பான சிலைவழிபாடு பல இடங்களில் கடவுளாலும் இறைவாக்கினர்களாலும் கண்டிக்கபடுகின்றது.
அவற்றில் சில-
விப32:4 பொன்னால் கன்றுகுட்டி சிலை செய்து கடவுளுக்குரிய வழிபாடு அதற்கு செலுத்தபடுகிறது
எண்25:1-5பாகல்பொகோர் என்ற வேற்றுதெய்வத்திற்கு கடவுளுக்குரிய வழிபாடு
தானி(இ)3-5 பேல் தெய்வம் கடவுளாகிறது
எரே32:34 மோலேக்கு தெய்வம் கடவுளாக ஆராதிக்கபடுகிறது/
எசே16:17கற்பனையாக ஆண்உருவம் செய்து அது கடவுளாக்கபடுகிறது.
இன்னும் சில சிலைவழிபாடுகள் 
நெகே9:18/1அர12:30/எரே44;17/2அர23:5/சாஞான13:1-3/உரோ1:21-25/2அர16:17/2அர23:13,14/எரே32:34/எசே16:17/1அர15:13/1அர16:32...இவைகளனைத்தும் சிலைவழிபாடுகளாகும்.
மக்கள் இவ்வாறாக கடவுளை மறந்து வேற்றுதெய்வங்களையும் மிருகங்களையும் இயற்கையையும் அருவருப்பான கற்பனைஉருவங்களையும அதன் சிலைகளைகளையும் வழிபட்டனர் இவைகள் தான் சிலைவழிபாடு.
பேராசை(எபே5-5)முரட்டுகுணம்(1சாமு15:23)சிலைவழிபாடு தான்
கடவுளுக்கு முதன்மையான இடத்தை கொடுத்துகொண்டு அவரை ஒருவரையே வழிபடுவதற்கு நமக்கு உதவும் பொருட்டே ஆலயங்களில் சுரூபங்கள் வைக்கபடுகின்றன.
நம்முடைய பாவங்களுக்கு கழுவாயாக மாறி நமது பாவங்களை சிலுவையில் அறைந்து நிலைவாழ்வை நமக்களித்த இயேசுவை நம்முடைய இதயங்களில் ஏற்பதற்காகவும் அவரை மட்டுமே வழிபடுவதற்காகவும் பாடுட்ட சுரூபம் வைக்கபட்டுள்ளது
.கடவுளை சார்ந்த சித்திரம் இருக்கவேண்டிய என் உள்ளத்தில் உலகை சார்ந்த உருவங்களோ படங்களோ அபகரித்து கொண்டு நாம் அவற்றை ஆராதிப்பவனாக மாறாமல் இருக்க கடவுளை குறித்த சித்திரம் பேருதவியாக இருக்கும் அதற்காகவே நமது ஆலயங்களில் சுரூபங்கள் வைக்கபடுகின்றன
.நாம் இந்த சுரூபங்களையல்ல இந்த சுரூபங்கள் எதை சுட்டி காட்டுகின்றனவோ அதற்கே ஆராதனை செலுத்துகிறோம்.பாடுபட்ட சுரூபம் இயேசுவை நினைவுபடுத்துகின்ற அடையாளமாக இருப்பதால் நமது வழிபாடுகள் இயேசுவுக்கே சென்றடைகிறது.ஆகவே இது சிலைவழிபாடல்ல.
சாத்தானை சிலையில்லாமலோ சிலை வைத்தோ எப்படி வழிபட்டாலும் அது கடவுளால் கண்டிக்கப்படுகிற அருவருப்பான சிலைவழிபாடு தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்
ஆக நாம் எப்படி வழிபடுகிறோம் என்பதல்ல யாரை வழிபடுகிறோம் என்பது தான் முக்கியம்.
மனிதர்களாகிய நாம் அனைவரும் படைப்பின் கடவுளை மட்டுமே வழிபடவேண்டும்
மாறாக ஆளுக்கொரு கற்பனை உருவங்களையோ &மிருகங்களின் சிலைகளையோ &வேற்று தெய்வங்களின் சிலைகளையோ உருவாக்கி,அதற்கு கடவுளுக்குரிய வழிபாடை செய்யகூடாது என்பதே கடவுளின் முதல் கட்டளையாகும்.
இந்த கட்டளையை கடவுள் முதல் கட்டளையாக நமக்கு தருவதற்கு காரணம்,அன்றைய மக்கள் படைப்பின் கடவுளை வழிபடாமல் வேற்றுதெய்வங்களையும் இயற்கையையும் கற்பனைதெய்வங்களையும் மிருகங்களின் சிலைகளையும் வழிபட்டனர்.இதுவே சிலைவழிபாடு
இதையே கடவுள் கண்டிக்கிறார்.பைபிள் முழுவதும் பல இறைவாக்கினர்களால் கண்டிக்கபடுகிறது
மாறாக படைப்பின் கடவுளை ஒரு அடையாளம் மூலமாக வழிபடுவது சிலைவழிபாடல்ல.
இன்று நேற்றல்ல பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்தே மக்கள் கடவுளை இவ்வாறாக அடையாளங்கள் வழியாகவே வழிபட்டு வந்தனர்.
இறைவன் இஸ்ராயேல் மக்கள் மத்தியில் பிரசன்னமாயிருப்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காக ஒரு பேழை,அதன் மேல் ஒரு அரியணை,அதன் இரு புறங்களிலும் இரண்டு கெரூபீன் உருவங்கள்(சம்மனசு சுரூபம்)செய்து வைக்க கடவுள் சொல்கிறார்.அதிலிருந்து அவர்களோடு பேசினார்(விப25:10-22,எபி9-5)
இஸ்ராயேல மக்கள் சென்ற இடமெல்லாம இந்த பேழையை தூக்கி சென்றார்கள்(1சாமு4:3-7&1அர8:1-9)பேழை தங்களிடமில்லாத போது கடவுளின் மாட்சி தங்களிடமில்லாததாக உணர்ந்தார்கள்(1சாமு4:23)
யோசுவா ஆண்டவரின் பேழையை மக்களிடையே தூக்கி செல்ல குருக்களுக்கு கட்டளையிடுகிறார்.இந்த ஆண்டவரின் பேழைக்கென்று ஒரு ஆசாரகூடாரம் அமைத்தார்கள்.
.மோயிசனும் யோசுவாவும் மூப்பர்களும் ஆண்டவரின் உடன்படிக்கை பேழையின் முன் முகங்குப்புற விழுந்து கடவுளை ஆராதித்தார்கள்(எண்20:6&யோசு7:6)
இந்த பேழையின் முன் கடவுளுக்கு செலுத்த வேண்டிய பலியை செலுத்தினார்கள்(2சாமு6:13)தாவீது நடனமாடுகிறார்(2சாமு6:14)தாவீது கடவுளுக்கு பேழையின் முன் பலி செலுத்துகிறார்(6சாமு6:17,18)
ஆண்டவரின் பேழையை குருக்கள் தூக்கி கொண்டு யோர்தான் ஆற்றில் இறங்கவே தண்ணீர் இரண்டாக பிரிந்து மக்கள் ஆற்றை கடந்து செல்ல உதவியது(யோசு3:7-17)
ஆண்டவரின் பேழையை தூக்கி கொண்டு நகரின் மதில்சுவரை சுற்றி வந்தபோது மதில் சுவர் இடிந்து விழுந்தது நகரை கைப்பற்றுகிறார்கள்(யோசு6:6-20)
இவ்வாறாக உருவமற்ற படைப்பின் கடவுளை உடன்படிக்கை பேழை வழியாக மக்கள் வழிபட்டனர்.
அதே கடவுள் மனுவுருவான மறைபொருளின் அடிப்படையிலும் இயேசுவின் சுரூபமும் நற்கருணையும் கடவுள் நம்முன்னே பிரசன்னமாயிருப்பதை நினைவுபடுத்த உதவுகிறது.
கிபி787ம் ஆண்டில் நிசாயா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுசங்கம் தூய ஆவியாரின் உதவியால்(யோவா16:12,13&அப20:28) விவாதித்து,ஆலயங்களில சுருபம் வைக்க வேண்டும் என அறிக்கையிட்டது.
..இயேசுவின் சுரூபமும் நற்கருணையும் நம் சிந்தனைகளை கடவுளை நோக்கி அழைத்து செல்லும் கருவிகளாகவே அமைகிறது ஆகவே இது சிலைவழிபாடல்ல என்பதை அறிந்து கொண்டீர்கள்.
மேலும் அன்னைமரியாவிற்கும் புனிதர்களுக்கும் சுரூபம் வைப்பது அவர்களை நினைவுபடுத்துவதற்காகவே மாறாக புனிதர்களையும் அன்னைமரியாவையும் ஆராதிப்பது இல்லை.மூவொரு கடவுளுக்கு மட்டுமே ஆராதனை.
"உங்களுக்கு கடவுளின் வார்த்தைகளை எடுத்துச்சொன்ன தலைவர்களை நினைவு கூறுங்கள்.அவர்ளது வாழ்வின் நிறைவை எண்ணிபார்த்து நீங்களும் அவர்களை போல் நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்-எபி13-7"
என்ற இறைவாக்கின் படி காலகாலமாய் புனிதர்களை நினைவு படுத்தவே அவர்களின் திருசுரூபம் ஆலயங்களில வைக்கபடுகிறது
"..நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்துகொண்டு என் உடன்படிக்கையை உறுதியாய் பற்றிகொள்ளும் அண்ணகர்களுக்கு என்இல்லத்தில் என்சுற்றுசுவர்களுக்குள் நினைவுசின்னம் ஒன்றை எழுப்புவேன்...(ஏசாயா56:4,5)
அண்ணகர்கள் தான் புனிதர்கள்,
ஆண்டவரின் இல்லத்தில் எழுப்பபடும் நினைவு சின்னம் தான் புனிதர்களின் சுரூபம்.
ஆம் அன்பர்களே,கத்தோலிக்க வழிபாடுகள் அனைத்து அர்த்தமுடையவை,வரலாறு உடையவை,இயேசு மற்றும் திருதூதர்களால்கற்றுதரப்பட்டவை,
இயேசு மற்றும் அன்னைமரியாளால் பல காட்சிகள் வழியாக வலியுறுத்தப்பட்டவை
ஆகவே,பிரிவினை சகோதரர்களே,கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கி போராடி கொண்டிருக்கிற இந்த காலகட்டங்களில் உண்மையான கிறிஸ்தவ வழிபாட்டை உங்களின் அறியாமையினால் சிலைவழிபாடு என்று கொச்சை படுத்தி,கிறிஸ்தவர்களுள் மன கசப்பை ஏற்படுத்தவேண்டாம்

1 Response to "அன்பு கிறிஸ்தவர்களேசிலைவழிபாடு என்றால் என்ன "

  1. சிலைவழிபாடே வைக்ககூடாது சொல்ராரு பின்னயும் வச்சாலும் தப்பு இல்லனு சொல்ரீங்களே இது எப்படி நியாயம்

    ReplyDelete

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)