கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் லிங்கா.
கடந்த மே 2-ம் தேதி மைசூரில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஜினி ஜோடியாக அனுஷ்கா மற்றும் இந்தி நடிகை சோனாக்ஷி சின்கா இருவரும் நடிக்கின்றனர். இந்நிலையில் லிங்காவில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை நயன்தாரா நடனமாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் வரும் ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு நயன்தாராவை நடனமாட வைக்க விரும்பிய படக்குழுவினர் அவரை அணுகியிருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா, ரஜினி படம் என்பதால் உடனே ஓகே சொல்லி விட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ரஜினியுடன் ‘சந்திரமுகி' படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா.
அதன்பிறகு ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி' படத்தில் ரஜினியுடன் இணைந்து அறிமுக பாடலில் நடனமாடினார். பின்னர், ரஜினி நடிகராக நடித்த ‘குசேலன்' படத்தில் நடிகையாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்போது லிங்கா படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறாராம் நயன்தாரா.
0 Comment "ரஜினியுடன் மீண்டும் நயன்தாரா!"
Post a Comment