எனது வாழ்க்கை திறந்த புத்தகம். நான் எனது பணியை திறமையுடன் சிறப்பாக செய்துள்ளேன். இப்போது பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்திய மக்களே, உங்கள் தீர்ப்பை நாங்கள் மனித நேயத்துடன் ஏற்றுக் கொள்கிறோம்; உங்களின் முடிவை மதிக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் பல சாதனைகளை புரிந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாடு தற்போது மிகவும் பலம் வாய்ந்ததாக உருவாகியுள்ளது. நாட்டிற்காக எனது பங்களிப்பை தந்தததற்காக நான் பெருமை கொள்கிறேன்;
இந்த உயர்ந்த பதவியில் இருந்து விலகினாலும், உங்களின் அன்பை எப்போதும் மறக்க மாட்டேன்.
இந்தியா பொருளாதார துறையில் உயர்ந்த நிலையை அடையும் என உறுதி அளிக்கிறேன். அடுத்து வரும் அரசு வெற்றிகரமாக செயல்பட நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
0 Comment "பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை "
Post a Comment