அமெரிக்காவை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஃபேஸ்புக் மூலம்அறிமுகமான தனது மகள் வயதில் இருக்கும் 25 வயது இந்திய இளைஞரை கரம்பிடித்துள்ளார். அதற்காக ஆடம்பரமான அமெரிக்க வாழ்க்கையைத் துறந்துஇந்தியா வந்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்தவர் அட்ரியானா பெரால்(வயது 41). அமெரிக்காவில் மிகவும் ஸ்டைலிஷாக வாழ்ந்து வந்தவர் பேஸ்புக்கின் மூலம், முகேஷ் குமார்(வயது 25) என்ற இளைஞர் நண்பராகி உள்ளார். பின் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ளவே, நட்பு காதலாக மாறியது, உடனே அட்ரியானாவை தொடர்பு கொண்ட முகேஷ் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அட்ரியானா கூறுகையில், முகேஷ் தனது காதலை போனில் வெளிப்படுத்தியபோது என்னால் ஒன்றும் கூறமுடிவில்லை, எனக்கு சிரிப்புதான் வந்தது. நாங்கள் சிலவற்றை பேசினோம், நான் முகேஷை தீவிரமாக உணர்ந்தேன். நீ என்னுடைய இதயத்தை வென்றால் திருமணம் குறித்து பரிசீலனை செய்கிறேன் என்று கூறினேன்.
அதன்பின் நாங்கள் இரண்டு மூன்று வாரங்களாக பேசினோம். எனது 25 வயது மகள் என்னுடைய நடவடிக்கையை தொடர்ந்து கவனித்து வந்தார், என்னுடைய நிறைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவில் என்னுடைய பாதுகாப்பு குறித்து மிகவும் பயப்பட்டனர். ஆனால் நான் மிகவும் தெளிவாக முடிவு எடுத்தேன், முகேசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்தியா வந்த அட்ரியானா, தனது உடையில் இருந்து அனைத்தையும் மாற்றிக் கொண்டார். இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
தற்போது வீட்டு வேலைகள், சமையல், துணி துவைத்தல் மற்றும் விவசாய வேலை என அனைத்தையும் அட்ரியானா செய்து வருகிறார், இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
0 Comment "பேஸ்புக் காதலுக்காக ஆடம்பர வாழ்வை விட்டு கிராமத்திற்கு சென்ற அமெரிக்க பெண்!"
Post a Comment