பெண்கள் மேலாடையின்றி போராட்டம்


இணையதளத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்களுக்கும்  சென்சார் கொண்டு வர அமெரிக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது.இந்த இணையதள சென்சார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  வாஷிங்டன் நகரில் உள்ளபார்க் சதுக்கத்தில் பிரி தி நிப்பில் என்ற அமைப்பு சார்பில் பெண்கள் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



அரிக்காவில் உள்ள 37 மாநிலங்களில் மேலாடையின்றி பெண்கள் வெளியே வருவது குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள இத சட்டத்தை எதிர்த்தும், இணையதள சென்சார் திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தும் மேலாடையின்றி பெண்கள் கோஷம்
எழுப்பினர் இந்த அமைப்பை உருவாக்கிய லீனா என்பவர் கூறும் போது தங்கள் போராட்டம் வெற்றி பெறும்வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் கூறினார். 




இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.  போலீஸார் அவர்களை கலைந்துபோகும்படி எச்சரித்தனர்.  போலீஸாரின் எச்சரிக்கைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றாலும், மீண்டும் தங்கள் போராட்டத்தை உரிய நேரத்தில் தொடங்குவோம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

0 Comment "பெண்கள் மேலாடையின்றி போராட்டம்"

Post a Comment