இந்திய சுற்றுப்பயணத்தில் நவாஷ் ஷெரீப்புக்கு முழு மனநிறைவு இல்லை


மோடி பிரதமாரக பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப், இந்தியா நடத்திய விதத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில், முதல் முறையாக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கபட்டு இருந்தது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட  சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு மறுநாள் சார்க் நாட்டு தலைவர்களை தனித்தனியாக மோடி சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரீப்பையும் சந்தித்து  நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 



இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப், இந்திய சுற்றுபயணத்தில் முழு திருப்தி அடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கினறன. இது குறித்து அங்குள்ள செய்தி சேனல் ஒன்றிற்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- கூட்டாக இரு நாட்டு பிரதமர்களும் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று நவாஷ் ஷெரீப் நினைத்து இருந்தார். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. கூட்டாக அறிக்கை வெளியிடப்படும் என்று நவாஷ் ஷெரீப் குழு எதிர்பார்த்தது. ஆனால் எதுவுமே வெளியிடப்படவில்லை.மாறாக பாகிஸ்தான் நிலைப்பாடு பற்றி எதுவும் குறிப்பிடாமல் ஒருதலைபட்சமாக புதுடெல்லியில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.


 இந்தியாவின் அறிக்கை வெறும் குறிப்பை வெளியிடுவதாகத்தான் இருந்தது. நவாஷ் ஷெரீப்பின் வருகையின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

0 Comment "இந்திய சுற்றுப்பயணத்தில் நவாஷ் ஷெரீப்புக்கு முழு மனநிறைவு இல்லை"

Post a Comment