தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு 25-40 மில்லியன் பயணிகள் கையாளும் விமான நிலையங்கள் மத்தியில் அதன் சேவை தரம் அடிப்டையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 174 நாடுகளில் உள்ள 1751 ஏர்போர்ட்களில் நடந்த ஆய்வு முடிவில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சேவை தரம் புள்ளியில் 5 க்கு 4.84 புள்ளிகளை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது. தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த விழாவில் இந்த விருது அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி தேர்வு"
Post a Comment