துப்பாக்கியைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கிடையில், துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார். தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியே உதவியாளர்களை வைத்திருப்பதால் கத்தி மற்றும் ஹாலிடே படங்களின் வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஹாலிடே படம் வருகிற 6-ஆம் தேதி வெளியாகவிருப்பதால் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் போடப்பட்ட ஹாஸ்டல் செட்டில் நடந்து வந்த கத்தி படபிடிப்பை திடீரென நிறுத்திவிட்டு மும்பை ஓடிவிட்டார்.
இதனால் கடுப்பாகி போன விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான போட்டோ சூட் நடத்த ஆரம்பித்து விட்டார். இருவருக்கும் மத்தியில் தயாரிப்பாளர் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.
0 Comment "கத்தி படப்பிடிப்பை நிறுத்திவிட்டு முருகதாஸ் ஓட்டம்; கடுப்பில் அடுத்த படத்தை துவங்கிய விஜய்"
Post a Comment