மோடி பிரதமரானால்....


இந்தியாவில் என்ன நடக்கும்?
ஒருவேளை கருத்து கணிப்புகள் படி மோடி பிரதமர் அனாலும் அது கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் கூடிய கூட்டணி ஆட்சியாகவே அமையும். கூட்டணி ஆட்சியமைக்க சில பல இடங்கள்பாஜகவிற்கு வேண்டும் இன்கிற நிலை ஏற்பட்டால்
நிச்சயம் ஜெயலலிதா மோடிக்கு ஆதரவு அளிப்பார் என நம்பப்படுகிறது. பாஜக ஆட்சி அமைத்தால் அரசில் சிவாசேனா, தெலுங்கு தேசம், சிரோமோனி அகாலி தள், லோக்ஜன சக்தி போன்ற கட்சிகளின் சிறிய அளவிலான பங்களிப்பு இருக்கலாம்.ஆனால் மோடி அரசை ரிமோட் கண்ட்ரோல் ஆக இருந்து இயக்க போவது RSS, விஷ்வ இந்துபரிஷத் போன்ற சில சங்பரிவார் அமைப்புக்கள் தான் என்பது பாஜக வின் 2014 தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற ராமர் கோவில், பொதுசிவில் சட்டம் போன்றவற்றின் மூலம் தெளிவாகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து அரசியலுக்கு வந்த மோடிக்கு அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவது என்பது இயலாத காரியம். சமமாக பார்க்காவிட்டாலும் சிறுபான்மை மக்களையும் பாதுகாக்கும் கடமை மிக்க உயர்ந்த முதல்வர் பதவியிலிருந்து கொண்டு வேலியே பயிரை மேந்தது போல 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம்கள் கொல்லபடுவதை தடுக்ககூடாது என அரசு நிர்வாகமே செயல்பட்டது. இந்த அரசுக்கு தலைமை தாங்கிய மோடி நாளை இந்தியாவின் பிரதமர் என்றால் நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது அல்லவா? அரசியலில் தன்னை வளர்த்து விட்டவர்களையே ஓரம் கட்டிய நன்றி மறந்தவர், திருமணம் செய்ததை பல தேர்தல்களில் மறைத்த பொய்யர் என நாளைய பிரதமரின் நாணயம் கேள்வி குறியான ஒன்று. இவருடன் எந்த விதத்திலும் வாஜ்பாயை ஒப்பிட முடியாது. இதை மோடியே தந்தி டிவி பேட்டியில் ஒப்புகொண்டார். தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே மோடிக்கு வாக்களிக்காமல் இருந்தால் பாகிஸ்தானுக்கு செல்ல நேரிடும் என இந்திய வாக்காளர்களை மிரட்டுபவர்கள், முஸ்லிம்களை இந்துகள் வாழும் இடங்களிலிருந்து காலி செய்ய 48 மணி நேரம் கெடு விதித்தவர்கள் தான் மோடி அரசின் ரிமோட் கண்ட்ரோல் ஆக இருக்க போகின்றனர். உலகமயமாக்கல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை இந்தியாவிலும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். எரிபொருளில் இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியாவில் விலைவாசி உயர்விற்கு இதுவே காரணம். ஆகவே மோடி ஆட்சிக்கு வந்தாலும் லேடி வந்தாலும் விலைவாசி ஒன்றும் குறையபோவதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்றபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தால் கர்நாடகாவில் சுரங்க ஊழலை மூடி மறக்க முயன்றது போன்ற முயற்சிகள் தான் நடக்கும். மோடி நினைத்தவுடன் இந்தியாவை ஒரேயடியாக வளர்ச்சி அடைய செய்துவிட முடியாது. எந்த ஒரு வளர்ச்சி திட்டத்திற்கும் மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பும் வேண்டும். இவர்களின் முந்தைய ஆட்சியின் போது அரங்கேறிய பாராளுமன்ற தாக்குதல், தீவிரவாதிகளை பத்திரமாக அத்வானியே விமானத்தில் கொண்டு போய் சரணாகதி ஆனது பாதுகாப்பு விஷயத்தில் இவர்கள் வீக்காக உள்ளதால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசபாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது. இப்படி எவ்வளவோ இருக்கும் போது ஒருவேளை மோடி பிரதமரானால், சில ஆயிரம் கோடி முதலீடு செய்து விளம்பரம் செய்தால் யார் வேண்டுமானாலும் இந்தியாவின் பிரதமர் ஆகிவிடலாம்..... இந்தியாவில் விளம்பரம் மூலம் எதையும் விற்று விடலாம் என்பது போன்ற பார்வையே இந்தியா மீது உலக நாடுகளுக்கு இருக்கும்.

0 Comment "மோடி பிரதமரானால்.... "

Post a Comment