அன்பை தேடி......! அம்மாவும் நீயும்.....!!


1. உனக்கு ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவ முழுதும் அழுதாய்.
2. உனக்கு இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய்.
3. உனக்கு மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய்.

4. உனக்கு நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய்.

5. உனக்கு ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய்.

6. உனக்கு ஆறு வயதானபோது அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். நீயோ போகமாட்டேன் என்று அழுதாய்.

7. உனக்கு ஏழு வயதாகையில் உனக்கு கிரிக்கெட் பந்து வாங்கித் தந்தாள். நீயோ அதைக் கொண்டு அடுத்த வீட்டு சன்னலை உடைத்தாய்.
8. உனக்கு பத்து வயதாகையில் உன்னை ஆசையுடன் இசைப் பயிற்சிக்கு அனுப்பினாள். நீயோ பயிற்சியெடுக்காமல் நன்றி செலுத்தினாய்.
9. உனக்குப் பதினொன்று வயதாகையில் உன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாய் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றாள். நீயோ அவளை வேறு இருக்கையில் அமரச் சொன்னாய்.
10. உனக்குப் பன்னிரண்டு வயதாகையில் பார்க்காதே என்று சொன்ன தொலைக்காட்சி சானல்களை அவள் இல்லாதபோது பார்த்தாய்.
11. உனக்குப் பதிமூன்று வயதாகையில் தலை முடியை கத்தரிக்கச் சொன்னாள். நீயோ உனக்கு ரசனையே இல்லை என்று பதில் சொன்னாய்.
12. உனக்குப் பதினான்கு வயதாகையில் பள்ளியில் ஒருவார சுற்றுலா அனுப்பினாள். நீயோ ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் அவளை நிராகரித்தாய்.
13. உனக்குப் பதினைந்து வயதாகையில் அலுவலகத்திலிருந்து ஆர்வமுடன் ஓடி வந்து உன்னை அழைக்கையில் அறையைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாய்.
14. உனக்குப் பதினாறு வயதாகையில் உனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். நீ அவளுடைய வாகனத்தை சொல்லாமலேயே எடுத்துக் கொண்டு சுற்றினாய்.
15. உனக்குப் பதினேழு வயதாகையில் அவள் ஒரு தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பதாய் சொன்னாள். நீயோ தொலைபேசியை கீழே வைக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்தாய்.
16. உனக்குப் பதினெட்டு வயதாகையில் உன்னுடைய பள்ளி இறுதித் தேர்வு வெற்றிக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நீயோ அவளை தனியே இருக்க விட்டு நண்பர்களுடன் இரவு முழுதும் கொண்டாட்டம் நடத்தினாய்.
17. உனக்குப் பத்தொன்பது வயதாகையில் கல்லூரியில் பணம் கட்ட வந்தாள். நீயோ அவளை ரகசியமாய் சந்தித்துப் பேசி அனுப்பினாய், நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்க அவமானப் பட்டாய்.
18. உனக்கு இருபது வயதாகையில்நீ யாரையாவது விரும்புகிறாயாஎன்னும் அவளுடைய கேள்விக்கு, ‘இதிலெல்லாம் தலையிடாதேஎன்று பதில் சொன்னாய்.

19. உனக்கு இருபத்து ஒன்று வயதாகையில் உன்னுடைய எதிர்காலம் பற்றி அறிவுரை சொன்னாள். நீயோ எனக்கு உன்னைப் போலாக வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாய்.

20. உனக்கு இருபத்து இரண்டு வயதாகையில் உன் கல்லூரி வெற்றிக்காய் பெருமிதப்பட்டாள். நீயோ நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் வேண்டும் என்றாய்.

21. உனக்கு இருபத்து மூன்று வயதாகையில் பாசத்தோடு உனக்களித்த பரிசைக் குறித்துநல்லாவே இல்லைஎன்று நண்பர்களிடம் சொன்னாய்.

22. உனக்கு இருபத்து நான்கு வயதாகையில் உன்னுடைய தொழில் திட்டம் பற்றிப் பேசினாள். அம்மா சும்மா இருப்பாயா என்று அதட்டி உன் நன்றியைக் காட்டினாய்.

23. உனக்கு இருபத்து ஐந்து வயதாகையில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழித்து திருமணம் செய்து வைத்து கண்ணீர் விட்டாள். நீயோ அவளை விட்டு தூரமாய் வந்து தனிக்குடித்தனம் செய்தாய்.

24. உனக்கு முப்பது வயதாகையில் உன் குழந்தை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள் சொன்னாள். நீயோஅதெல்லாம் அந்தக் காலம்…’ என்று பதில் சொன்னாய்.

25. உனக்கு நாற்பது வயதாகையில் உன்னை அழைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வர முடியுமா என்றாள். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன் என்று பதில் சொன்னாய்.

26. உனக்கு நாற்பத்தைந்து வயதாகையில் உன்னைக் காணவேண்டும் என்று விரும்பினாள் நீயோ குழந்தைக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று பதில் சொன்னாய்.

27. உனக்கு ஐம்பது வயதாகையில் அவள் நோய்வாய் பட்டாள். உன் கரத்தைப் பிடித்துக் கொண்டே அருகில் இருக்க ஆசைப்பட்டாள். நீயோ முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை செய்தாய்.

28. ஒருநாள் விடியலில் உனக்கு அழைப்பு வந்தது. உன்னைக் காண வேண்டும் என்னும் ஆசையை முனகலாய் உச்சரித்துக் கொண்டே இறந்து போன உன் தாயைப் பற்றி. நீ காலம் கடந்து கண்ணீர் விட்டாய் !

0 Comment "அன்பை தேடி......! அம்மாவும் நீயும்.....!!"

Post a Comment