கவலைப்படாதீங்க...உங்க காதலன் உங்களை கண்டுக்காம இருக்காங்களா?

1.உங்கள் காதலனிடம் சரியாக பேசாமல் இடைவெளியை மேற்கொள்ளும் போது, அவர்களின் முன்பு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருப்பது போல் நடந்து கொள்ளுங்கள். இதனால் இத்தனை நாட்கள் நீங்கள் பேசியதை சீரிஸாக எடுத்துக் கொள்ளாத அவர்கள், பின் உங்களிடம் வந்து சீரியஸாக பேசுவார்கள். அதன் பின் நீங்கள் உங்களது மனதில் உள்ளதை சொல்லுங்கள்.
2.உங்கள் காதலன் உங்களை கண்டு கொள்ளாமல் எப்போதாவது உங்களை காண அழைத்தால், அப்போது அவரை சந்திக்க செல்ல வேண்டாம். இதனால் அவர்கள் உங்கள் அதிகம் மிஸ் பண்ணுவதுடன், உங்கள் நினைப்பாகவே இருப்பார்கள். பின்னர் தான் உங்களின் அருமை அவர்களுக்கு புரியும்.

3.எப்போதும் அவர்களுடனேயே நேரத்தை செலவழிக்காமல், சற்று நண்பர்களுடனும் நேரத்தை செலவழியுங்கள். ஏனெனில் வாழ்வில் நண்பர்களும் மிகவும் முக்கியமானவர்கள். எனவே மனம் கஷ்டமாக இருக்கும் தருணம், நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள். அப்படி நேரத்தை செலவழிக்கும் போது, உங்கள் காதலன் போன் செய்தால் எடுக்காதீர்கள்.. அப்படி செய்தால் தான், உங்கள் காதலனுக்கு நீங்கள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று தெரியும். பின்னர் என்ன, இனிமேல் உங்கள் நினைவாகவே இருப்பார்கள்.

4.
தினமும் உங்கள் காதலனை கவரும் வகையிலும், அவர்களுக்கு பிடித்தவாறான அழகான ஆடைகளை அணிந்து வாருங்கள். சொல்லப்போனால், மற்ற ஆண்கள் உங்களை சைட் அடிக்கும் வண்ணம் அணிந்து வாருங்கள். இதனால் உங்கள் காதலன் 'இவள் என் காதலி' என்ற பெருமிதத்துடன், உங்களை சைட் அடித்து கொண்டிருப்பார்.

 5.அவர்களின் சின்ன சின்ன கனவுகளை அவ்வப்போது நிறைவேற்றுவது. இவ்வாறெல்லாம் செய்தால், நீங்கள் அவர்கள் மேல் வைத்துள்ள அன்பை அவர்கள் உணர்ந்து, இனிமேல் சரியாக நடந்து கொள்வார்கள்.

0 Comment "கவலைப்படாதீங்க...உங்க காதலன் உங்களை கண்டுக்காம இருக்காங்களா? "

Post a Comment