பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பார்லிமென்ட்டில் தனி அறை இல்லாமல் தவித்து வருகிறார். 16வது லோக்சபா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய எம்.பி.,க்களாக பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிலையில், இன்று மதிய இடைவேளையின் போது, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள தனது அறைக்கு வந்த அத்வானிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை அவர் பயன்படுத்தி வந்த அறையின் கதவில் பொருத்தப்பட்டிருந்த அவரது பெயர் பலகை அகற்றப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் பா.ஜ., லோக்சபா உறுப்பினர்கள் அறையிலேயே ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "பார்லிமென்ட்டில் அறை இல்லாமல் தவிக்கும் அத்வானி"
Post a Comment