ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் தீனா. அப்படத்தில் அஜீத் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பெரும் வெற்றிபெற்றதுடன் இப்படத்தில் இடம்பெற்ற வசனமான “தல” என்பது அஜீத்தின் அடையாளமாகவும் மாறிப்போனது. தற்போது விஜய்யை வைத்து கத்தி என்ற பெயரில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் முருகதாஸ் அடுத்து அஜீத்தை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது அடுத்த படங்கள் குறித்து தகவல்கள் வெளிவராத காரணத்தால் முருகதாஸே அடுத்த படத்தை இயக்குவார் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை அஜீத்தும் முருகதாஸும் மீண்டும் இணைந்தால் அப்படம் தீனா போன்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "மீண்டும் முருகதாஸுடன் இணையும் அஜீத்?"
Post a Comment