தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சில் திமுக ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவலை கருணாநிதி மறுத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "'விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தங்களுக்கு 90 இடங்கள் வேண்டுமென்று திமுகவிடம் வலியுறுத்துவதாகவும், அதனால் திமுகவின் மெகா கூட்டணி ஆசைக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் பத்திரிகை ஒன்றில் ('தி இந்து' அல்ல) செய்தி வெளியாகியுள்ளது. ஒரு செய்தியை, அது முழுப் பொய் என்று தெரிந்தே, மனசாட்சியைக் கட்டிப் போட்டு விட்டு, இட்டுக்கட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செய்திகளை நம்ப வேண்டாமென்று திமுகவினரும் பொதுமக்களும் இந்தச் செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "தமிழகம் தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சா?- கருணாநிதி விளக்கம"
Post a Comment