தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. இதில் முதல் வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித் தான்.
போர்ர்ப்ஸ் பத்திரிக்கை பணம், புகழ், செல்வாக்கு அடிப்படையில் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் சல்மான்கான் அனைத்து விதத்திலும் முதல் இடத்தில் உள்ளார்.அவர் கடந்த அண்டில் மட்டும் ரூ244 கோடி சம்பாதித்து உள்ளார். இரண்டாவது இடத்தில் அமிதாப்பச்சன் உள்ளார்.ரூ.197 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார்.ரூ.202 கோடியுடன் ஷாருகான் 3 வது இடத்தில் உள்ளார்.4 வது இடத்தில் கிரிக்கெட் வீரர் டோனி உள்ளார்.தொடர்ந்து அக்ஷய் குமார்,வீராட் கோலி,அமீர்கான் , நடிகை தீபிகா படுகோனே,ஹிருத்திக் ரோஸன்,சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர்.
இதில் தமிழ் நடிகர்களில் விஜய் மற்றும் ரஜினியை பண விஷயத்தில் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் அஜித்.
ரூ. 37 கோடி ஈட்டி ரஜினிகாந்த் பண விஷயத்தில் 21 வது இடமும் புகழ் விஷயத்தில் 89 இடத்திலும் உள்ளார்
விஜய்க்கு பண விஷயத்தில் 23 வது இடமும் புகழ் விஷயத்தில் 80 வது இடமும் கிடைத்துள்ளது. ரூ 40 கோடி சம்பாதித்து அஜித் பணத்தில் 19 வது இடத்திலும் புகழில் 98 வது இடமும் பெற்று உள்ளார்.
தனுஷ் 78 வது இடத்தில் உள்ளார் கடந்த ஆண்டு அவர் ரூ.12 கோடி சம்பாதித்து உள்ளார். பணத்தில் 53 வது இடத்திலும் புகழில் 77-வது இடத்திலும் உள்ளார்.
0 Comment "பணத்தில் அஜித், புகழில் விஜய் போர்ப்ஸ் தரவரிசைபட்டியலில் ரஜினிகாந்தை பின்னுக்கு தள்ளினர்"
Post a Comment