இங்கிலாந்தில் வசிக்கும் நோயல், சூ ராட்ஃபோர்ட் தம்பதியர் 17வது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்திலேயே மிகப் பெரிய குடும்பம் இவர்களுடையதுதான். 43 வயது நோயலும் 39 வயது சூவும் குழந்தையிலிருந்தே நண்பர்கள். மிக இளம் வயதில் திருமணம் செய்துகொண்டனர். 13 வயதில் சூ முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். “மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்கள் இருவருக்குமான அன்பும் காதலும் 17 குழந்தைகள் வரை கொண்டு வந்துவிட்டது’’ என்கிறார் சூ. நோயலும் சூவும் கடின உழைப்பாளிகள். சொந்தமாக பேக்கரி தொழில் செய்து வருகிறார்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை. முதல் மகனுக்கு 26 வயதாகிறது. வளர்ந்த குழந்தைகள் தொழிலில் உதவி செய்கிறார்கள். ஒருநாளைக்கு 2 கூடை ஆப்பிள், ஒரு கூடை வாழைப்பழம், ஒரு கூடை ஆரஞ்சு, 8.5 லிட்டர் பால் இந்தக் குடும்பத்துக்குத் தேவைப்படுகின்றன. ஒருநாளைக்கு 12 தடவை துணி துவைக்க வேண்டியிருக்கிறது. ஓர் ஆண்டுக்கு குழந்தைகளுக்கு மட்டும் 30 லட்சம் ரூபாய் செலவாகிறது. பூமியில் மக்கள் தொகை அதிகரிக்கக் காரணமானவர்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். சிலரோ, அடுத்த குழந்தை எப்பொழுது என்று கிண்டல் செய்கிறார்கள். எல்லோரின் கேள்விகளையும் பார்வைகளையும் சமாளித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் நோயல், சூ குடும்பத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "பெரிய்ய்ய குடும்பம்!"
Post a Comment