சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரைத் தவிர சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), டிராஃபிக் ராமசாமி (சுயேச்சை) உள்ளிட்ட 27 பேர் களத்தில் உள்ளனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித் துள்ளது. முதல்வர் ஜெயலலிதா வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அதிமுக சார்பில் 28 அமைச்சர்கள், நிர்வாகிகளைக் கொண்ட 50 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் 28 பேரும் தொகுதியில் முற்றுகையிட்டு, வீடு வீடாகச் சென்று ஜெயலலிதாவுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும், 48 எம்.பி.க்கள், 150 எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலா ளர்கள், மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் என சுமார் 10,000-க்கும் அதிகமான அதிமுகவினர் ஆர்.கே.நகரில் குவிந்துள்ளனர். ஆர்.கே.நகரில் மொத்தம் 230 வாக்குச் சாவடிகள் உள்ளன. 3 வாக்குச் சாவடிக்கு ஒரு அலுவ லகம் அமைத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 50 வாக்காளர்களுக்கு 5 பேர் கொண்ட குழு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 50 வாக்காளர்களின் பெயர்களையும் ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்கின்றனர். பின்னர் அவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து முழு விவரங்களையும் சேகரித்து தனி நோட்டில் எழுதுகின்றனர். வாக்காளரின் பெயர், செல்பேசி எண், இ-மெயில் முகவரி, அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? கடந்த முறை யாருக்கு வாக்களித் தார்? இறந்த வாக்காளர், விடுபட்ட வாக்காளர் என அனைத்து விவரங்களையும் சேகரித்துள் ளனர். கட்சி சார்பில்லாத நடுநிலை வாக்காளர்களை தனியாகவும், வெளியூர் சென்றுள்ள வாக்காளர் களின் பெயர், தொடர்பு விவரங்களை தனியாகவும் குறித்து வைத்துள்ளனர். தண்டையார்பேட்டை கும்மாளம்மன் தெருவில் உள்ள 125, 126, 127 வாக்குச் சாவடிகள் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து கொண்டிருந்த அவரிடம் பேசிய போது, ‘‘எனக்கு ஒதுக்கப்பட்ட 3 வாக்குச் சாவடிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் இதுவரை 3 முறை நேரில் சந்தித்து பேசிவிட்டோம். நானே நேரில் சென்று ஒவ்வொரு வாக்காள ரையும் சந்தித்து வருகிறேன். வெளியூர் சென்றுள்ள வாக்காளர் களை தனியே பட்டியலிட்டு அவர்களை தொடர்புகொண்டு வருகிறோம்’’ என்றார். ஆர்.கே.நகரில் எங்கு பார்த்தாலும் வெளியூர் வாகனங் களையும், வெளியூர் நபர்களை யும் காண முடிகிறது. மிக குறுக லான சாலைகள், தெருக்களை கொண்ட தொகுதி என்பதால் வழக்கத்தைவிட அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவ தாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் நேற்று காலையில் தண்டையார்பேட்டை, மாலையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சுயேச்சையாக போட்டியிடும் டிராஃபிக் ராமசாமி எம்ஜிஆர் வேடத்தில் தொகுதியை வலம் வருகிறார். அவரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். 28 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஜெயலலிதா, மகேந்திரன், டிராஃபிக் ராமசாமி ஆகிய 3 பேரைத் தவிர மற்றவர்கள் களத்தில் இருப்பதற்கான எந்த அறிகுறியையும் ஆர்.கே.நகர் தொகுதியில் காண முடிய வில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 28 அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம"
Post a Comment