அழுக்கை நீக்காமல் சருமத்தை அழகுபடுத்த முடியாது. எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர்விட்டு, பஞ்சினால் முகத்தை நன்றாகத் துடையுங்கள். அழுக்கு பெரும்பாலும் நெற்றி, மூக்கு இடுக்குப் பகுதிகளில் அதிகம் படரும். தோலில் பதிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும்முறை இது.
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழத் தோல்களை காயவைத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தோல்களைத் தனியாகவும் அரைத்துப் பயன்படுத்தலாம். பழத்தோலுடன் சமஅளவு கிச்சலிக் கிழங்குப் பொடி சேர்த்து, ரோஸ் வாட்டர் கலந்து, பேஸ்ட் போல ஆக்க வேண்டும். இதை, முகம் முழுவதும் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். கருவளையம் இருப்பவர்கள், இதை மாதம் ஒரு முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
0 Comment "இறந்த செல்களை நீக்கும் ஸ்க்ரப்பிங் "
Post a Comment