அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளினைச் சேர்ந்தவர் டியோனா ரோட்ரிகஸ்(வயது 18). குடும்பத்தாருக்கு தெரியாமல் 14 வயதில் தாயாகியுள்ளார். அதன் பிறகு மீண்டும் ஒரு குழந்தையை பெற்றுள்ளார். அந்த குழந்தை மாயமாகியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக குடும்பத்தாருக்கு தெரியாமல் கர்ப்பமான டியோனா கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி நியூயார்க்கில் உள்ள க்வீன்ஸில் வசிக்கும் தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள கழிவறையில் 3.6 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பெற்ற கையோடு குழந்தையை கொன்று தனது கைப்பையில் போட்டுள்ளார். அதன் பிறகு மான்ஹாட்டன் பகுதியில் ஷாப்பிங் செய்துள்ளார். கடையில் அவர் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடை பாதுகாவலர் டியோனாவின் கைப்பையை சோதனை செய்தபோது அவர் திருடிய பேண்ட் மற்றும் குழந்தையின் உடல் இருந்தது. இதையடுத்து டியோனா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் கடந்த விழாக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எர்ல் வார்ட் கூறுகையில், டியோனா தனது குழந்தையை கொலை செய்யவில்லை. அது இறந்தே பிறந்தது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டியோனாவை ஜாமீனில் வெளியே விடக் கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 Comment " குழந்தையை கொன்று பிணத்துடன் ஷாப்பிங் சென்ற இளம் பெண் "
Post a Comment