இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடைய புகைப்படத்திற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சரான நீரா யாதவ் மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாலை போட்ட நேரமோ என்னவோ இன்று உண்மையிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் கலாம். ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இப்படி நடந்து கொண்டார் அமைச்சர் நீரா யாதவ். சம்பந்தபட்ட நிகழ்ச்சியானது ஒரு பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழாவாகும். இதற்கு சிறப்பு விருந்தினராக நீரா யாதவ் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு முன்பு அவர் அப்துல் கலாம் படத்திற்கு மாலை போட்டு வணங்கினார். அவர் மட்டுமல்ல, பாஜக எம்.எல்.ஏ மனீஷ் ஜெய்ஸ்வால், பள்ளியின் முதல்வர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் படத்தை வணங்கினர். யாருமே இந்த செயல் தவறு என்று எடுத்துச் சொல்லவில்லை என்பதுதான் வேதனையானது. இந்த சம்பவம் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நீரா யாதவ், "பெரிய மனிதர்கள், மக்களால் மதிக்கப்படும் தலைவர்களுக்கு இது போல மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்தான். கலாம் மாபெரும் விஞ்ஞானி. எனவேதான் அவருக்கு மாலை அணிவித்து வணங்கினேன்" என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அச்சம்பவத்தின் சர்ச்சை அடங்காத நிலையில், நிஜமாகவே அவர் நம்மை விட்டு பிரிந்து சென்ற சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Home
INDIA
கலாம் படத்துக்கு ஜார்க்கண்ட் பெண் அமைச்சர் மாலை போட்ட நேரம்.. உண்மையிலேயே பிரிந்து போன கலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "கலாம் படத்துக்கு ஜார்க்கண்ட் பெண் அமைச்சர் மாலை போட்ட நேரம்.. உண்மையிலேயே பிரிந்து போன கலாம்! "
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.