அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கேவி ஆனந்துக்கு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ரஜினிக்கு கதை சொல்லி, அவரது அனுமதிக்காகக் காத்திருந்த நேரத்தில் அஜீத்துக்காக ஒரு கதை உருவாக்கியிருந்தார் கே வி ஆனந்த்.
அதற்கு அஜீத்தும் ஓகே சொல்லி, இதையே தனது அடுத்த படமாக அறிவித்துவிடுங்கள் என்றாராம்.
இப்போது சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், இதை முடித்ததுமேகேவி ஆனந்த் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இந்தப் படத்தையும் ஏஎம் ரத்னமே தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், அஜீத்தின் முன்னாள் தயாரிப்பாளரான எஸ்எஸ் சக்ரவர்த்தி தனது நிக் ஆர்ட்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிப்பார் என சிலர் கூறி வருகின்றனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
0 Comment "அடுத்து அஜீத்தை இயக்குகிறார் கே வி ஆனந்த்!"
Post a Comment