விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஜில்லா’. இப்படத்தை ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார்.
தமிழில் வெற்றியடைந்த இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். தெலுங்கில் பெரிய ஹீரோக்களுக்கு படத்தின் கதையை கூறியிருக்கிறார்கள். கதையை கேட்டு திருப்தியடையாத அவர்கள் படத்தில் நடிக்க மறுத்தார்கள். கடைசியாக ‘ஜில்லா’ ரீமேக்கில் ரவிதேஜாவும் வெங்கடேஷும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் ரீமேக் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதலால் ‘ஜில்லா’ படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஜூலை 24ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் ரசிகர்களை கவர்வதற்காக காமெடி நடிகர் பிரம்மாணந்தத்தின் காமெடி காட்சிகளை மட்டும் படமாக்கி சேர்த்து வெளியிடுகின்றனர்.
தமிழில் ‘ஜில்லா’ வெற்றியடைந்து போல் தெலுங்கிலும் வெற்றி பெறுமா? என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 Comment "விஜய் படம் ஆந்திராவில் ஜூலை 24ம் தேதி ரிலீஸ் "
Post a Comment