சிம்புதேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ”புலி” படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறவுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரோமோ சாங் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவிற்கு ஆந்திர சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி மற்றும் மகேஷ் பாபு பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இவர்களுடன் புலி படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 17ம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
0 Comment "புலி ஆடியோ விழாவில் பங்குபெறும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்!!"
Post a Comment