சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக ரிலீசாகாமல் பிரச்சனையில் இருக்கும் படம் ‘வாலு’. இப்படம் பல காரணங்களால் தாமதமாகிக் கொண்டே வருகிறது. கடைசியாக இப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாகவிருந்தது. மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கால் மீண்டும் இப்படம் தள்ளி போனது.
இதனால் சோகத்தில் இருந்த சிம்புவுக்கு, விஜய் முன் வந்து தன்னுடைய படங்களை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்கள் மற்றும் பிற விநியோகஸ்தரர்களிடம் பேசி ‘வாலு’ படத்தின் பிரச்சனையை சுமூகமாக முடிக்க தீர்வு காணுங்கள் என்று கூறியிருக்கிறார்.
விஜய் செய்த இந்த உதவிக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில், ‘நிஜமான ஆதரவு அளித்த விஜய் அண்ணாவுக்கு என்னுடைய நன்றி. என்னுடைய உடன்பிறவா சகோதரர் விஜய்’ என்றார்.
0 Comment "விஜய் என் உடன்பிறவா சகோதரர்: சிம்பு "
Post a Comment