மாரி படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் மாரி. இப்படத்திற்கு இசை அனிருத். மாரி படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இப்படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இப்படத்தில் தனுஷ் அதிகப்படியான காட்சிகளில் புகைபிடிப்பது போல நடித்திருப்பதால் மட்டக்களப்பில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனுஷின் படத்துக்கு செருப்பு மாலையும் அணிவித்து அவர்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.  சமூகத்துக்கான நண்பர்கள் அமைப்பு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை நடத்தினர். 

இப்போராட்டத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் முழுக்க முழுக்க இளைஞர்கள் பங்குபெற்றனர். அவர்கள் கூறும் போது, “ இளம் சமூகத்தின் மத்தியில் புகையிலை பழக்கத்தினை ஒழிக்கவேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் சினிமா மூலமாக இவ்வாறான மக்கள் விரோத போக்குகளை வெளிப்படுத்துவதை கண்டிப்பற்தாக இங்கு கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். 

இதைப் பற்றி நேற்றைய மாரி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இந்தப் படத்தில் அதிகம் உபயோகப்படுத்தியிருக்கிறீகளே என்று கேட்டதற்கு, “ இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத் தான் நான் செய்ய முடியும். புகை, மது போன்ற காட்சிகளில் நான் நடிக்கமாட்டேன் என்று கூறினால் இயக்குநரின் படைப்பை தடுப்பது போன்றதாகிவிடும். தேவையில்லாத கதாபாத்திரங்களில் நான் புகைப்பிடிப்பது போல நடித்ததும் கிடையாது.

அனேகனில் முழு படத்திலுமே புகைப்பிடிப்பது போன்று நடித்திருக்க மாட்டேன். மாரி படத்துல லோக்கல் டானா நடிச்சதுனால அவன் புகைப்பிடிக்க மாட்டான் என்று படமாக்கினால் நெருடலா இருக்கும். இந்தப் படத்துல தப்பு இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், நான் நிஜ வாழ்க்கையில் புகைபிடிக்கும் பழக்கமில்லை. என்னை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தால்  என் நிஜ வாழ்க்கையை எடுத்துக்கெள்ளுங்கள். ப்ளீஸ் புகைபிடிக்காதீர்கள். 

சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள். அதை முன்னுதாரணமாக எடுக்க வேண்டாம் என்கிறார். ஆனாலும் இணையதிலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்ப்பு அதிகரித்துதான் வருகிறது. ரஜினியைப் பின் தொடர்ந்து ரசிகர்களின் உயிரைப் பறிக்கும் சிகரெட்டுக்கு விலைபோகியிருக்கிறார் தனுஷ் என்று பல எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

0 Comment "மாரி படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!"

Post a Comment