காங்கிரஸ் கட்சியிடம் உள்ள பணம் மொத்தமும், ஊழல்கள் மூலம் கொள்ளையடித்தது, பாரதீய ஜனதா கடும்தாக்கு

புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சியிடம் உள்ள மொத்த பணமும், ஊழல்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டதே என்று பாரதீய ஜனதா விமர்சனம் செய்து உள்ளது. 

லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டதால், பாராளுமன்றம் இன்று மூன்றாவது நாளாக முடங்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து அமளியில் ஈடுபடுவது காரணமாக அவை நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சி மீது மத்தியஅரசு குற்றம் சாட்டி உள்ளது. லலித் மோடி விவகாரம் தொடர்பாக விவாதத்திற்கு தயார் என்ற மத்தியஅரசு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என்று கூறியது. 

சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே பதவி விலகாமல் அவையை செயல்படவிட மாட்டோம் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இந்நிலையில் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பாரதீய ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துஉள்ளது. ஊழல்கள் மூலம் காங்கிரஸ் கட்சியே பணத்தை கொள்ளையடித்தது என்று பாரதீய ஜனதா கூறிஉள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பிரகாஷ் ஜவதேவ்கர் பேசுகையில்,  காங்கிரஸ் கட்சியின் அரசியல் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது அவர்கள் வளர்ச்சிஅடைய அனுமதிக்கவில்லை. இப்போதும் அதனையே செய்து வருகின்றனர். 

அனைத்து ஊழல்களிலும் காங்கிரஸ் கட்சி சாதனையை படைத்து உள்ளது, அனைத்து ஊழல்களும் அவர்களின் ஆட்சியின்போதே நடைபெற்றது. அவர்கள் கொண்டு உள்ள அனைத்து பணமும் ஊழல்கள் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டதே, என்று கூறிஉள்ளார். 

0 Comment "காங்கிரஸ் கட்சியிடம் உள்ள பணம் மொத்தமும், ஊழல்கள் மூலம் கொள்ளையடித்தது, பாரதீய ஜனதா கடும்தாக்கு"

Post a Comment